Tuesday, October 22, 2024

திராவிட வேதம் - பார்கவன் சோழன்


வேளாளரான நம்மாழ்வார் செய்த திருவாய்மொழியை திராவிட வேதம் என வைணவர்கள் அழைக்கிறார்கள். சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தே திராவிட வேதம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் என்ற சிறப்பு பெயரும் நம்மாழ்வாருக்கு உண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாதமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை திராவிட வேதம் எனக் குறிப்பிடுகிறார்.

திராவிட வேதம் என்பதை தமிழ்வேதம் தென்னாட்டு வேதம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

பன்னெடுகாலமாக திராவிடம் என்ற சொல் தமிழையும் தமிழர்களையும் குறிக்க பயன்பட்ட சொல் என்பது வரலாற்றை தேடிப் படிப்பவர்களுக்கு புரியும்.

இன்று திராவிட கட்சிகளின் மீதான முரண்பாட்டிற்காக திராவிட என்ற சொல்லை புறக்கணிப்பது அறிவின்மையையே காட்டும்.

நமது திராவிடம் ஒரு நீண்ட நெடிய பண்பாட்டையும் வாழ்வியலையும் நாகரிகத்தையும் குறிக்கும் சொல்.

திராவிடர் என்பது தென்னாட்டு மக்களின் சிறப்பு பெயர்.

- பார்கவன் சோழன்.

No comments:

Post a Comment

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்

டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  ...