சென்னை வெள்ளக்காடானது பார்வையிட்டார்கள், மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களும் பார்வையிட்டார்கள்! இந்தமுறை ஆட்சிக்கு வந்த திமுக உட்கட்டமைப்பை சரிசெய்துவிட்டோம் என்றார்கள் எங்கே என தேடி கொண்டிருக்கிறோம். ஒரு மழை பெய்தால் போதும் சென்னையின் வால் டாக்ஸ் சாலையில் இருந்து மின்ட், செளக்கார்பேட்டை, மன்னடி, ஜார்ஜ் டவுன், பூக்கடை வரை எந்த பகுதியிலும் கால் வைக்க முடியாது. இதில் சென்னையின் இதர பகுதிகள் பற்றி எல்லாம் தனிக்கதை.
அடுத்து இந்த முறை கோவை, மதுரை நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது அதிகம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. ஆளும் கட்சியான திமுகவின் சென்னைக்கு அடுத்து கடந்த மூன்றுமுறையாக இங்கு வென்றுவந்த அதிமுக கோவை நகர கட்டமைப்பு வசதிக்கு இவர்கள் செய்த பணிகளின் காட்சிதான் .அதிலும் கோவை நகரத்தின் மத்திய பகுதியான தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவை சார்ந்த வானதி ஸ்ரீனிவாசன் என்பதும் குறிப்பிடதக்கது. வாலங்குளத்தில் உள்ள படகு சேவையை கோவை நகர சாலைகளுக்கும் விரிவுபடுத்தலாம் மக்கள் பயன்பாட்டிற்கு.
அடுத்து மதுரை நகரம் இதற்கும் மேல் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலைகள் நமது மெத்த படித்த பிடிஆர் தொகுதி வேறு அதில் தான் வருகிறது. நகரத்தின் உட்சாலைகள் படுமோசம். மழை பெய்தால் எங்கு குழி உள்ளது பள்ளம் உள்ளது என்று தேடிபிடித்து தான் செல்ல வேண்டும்.
சனாதனமா, திராவிடமா என இத்தனை நாளாக பட்டிமன்றம் நடத்தி வந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளான சாலைகளை கூட ஒழுங்குபடுத்தவும் கவனிக்கவும் நேரமில்லாமல் போய்விட்டது போலும்.
பெரும்பாலான மக்கள் இங்கு நீங்கள் பேசும் கொள்கை, சித்தாந்தம் எல்லாம் அறிந்தவர்கள் அல்ல. மக்களை பொறுத்தவரை அவர்களின் தேவை வாழ்வாதாரம் தான். அதிலும் உங்களின் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலைகளிலும் சாக்கடை நீர் ஓடும் சாலைகளிலும் சகித்து சென்றுவர பழகிவிட்டார்கள். அதனால் உங்கள் பிழைப்பு ஓடுகிறது.
இந்த கொள்கை பேசும் அரசியல்வாதிகளை இங்கிருந்து அப்புறபடுத்தாமல் இங்கு எதுவும் மாறிவிடாது. கொள்கைகள் வெவ்வேறு முட்டாள் கூட்டத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறதே தவிர அவர்களால் இங்கு எந்த பயனும் இல்லை. அது திராவிட, சனாதன, கம்யூனிசவாதிகள் என யாராக இருந்தாலும் சரி.
ஒரு நாட்டின் மக்களின் வாழ்வாதாரம், நகர கட்டமைப்பு, கிராமப்புற வசதிகள் என முழு நேரமும் இதற்காக பணிபுரியும் ஆட்சி அமையும் வரை இது எதுவும் மாறிவிடாது.
நாய்பெற்ற தெங்கம்பழம் என்ற கதைதான் இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த கதை.
- பார்கவன் சோழன்.
No comments:
Post a Comment